கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி உருளைக்கிழங்கு டோனட்

public

ிறு சிறு முத்துகளாக இருக்கும்… சமைக்கும் முன் வெண்ணிறத்தில் பளிச்சிடும் இது, சமைத்த பின் கிட்டத்தட்ட ஒளி ஊடுருவும் வடிவத்தைப் பெற்றுவிடும். இப்படியொரு வித்தியாசமான தன்மைகொண்டது ஜவ்வரிசி. இதில் அனைவருக்கும் பிடித்தமான, சுவையான டோனட் செய்து அசத்தலாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை ஜவ்வரிசிக்கு உண்டு. இது பதற்றத்தையும் குறைக்கும்.
**என்ன தேவை?**
ஜவ்வரிசி – ஒரு கப்
பெரிய உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்)
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பெரிய பவுலில், வேகவைத்து, தோலுரித்து மசித்த உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஊறவைத்த ஜவ்வரிசியைத் தண்ணீர் வடித்துச் சேர்க்கவும். பிறகு அரிசி மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து இறுக்கமான மாவுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு சற்று தளர இருந்தால் இன்னும் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் பிசைந்த மாவை டிக்கி வடிவத்தில் செய்து கொள்ளவும்.
பின்னர் அதன் நடுவில் துளை ஒன்றைப் போட்டு டோனட் வடிவத்துக்குக் கொண்டுவரவும். டோனட்களை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். விருப்பமான சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
**[கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஸ்வீட், காரம், சூப்… டிப்ஸ்!](https://www.minnambalam.com/public/2022/02/06/2/sweet-karam-soup-tips)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *