மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 பிப் 2022

எதிர்ப்பை மீறி தமிழக மீனவர்களின் படகு ஏலம்!

எதிர்ப்பை மீறி தமிழக மீனவர்களின் படகு ஏலம்!

இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் எதிர்ப்பை மீறி இலங்கையில் தமிழக மீனவர்களின் படகு ஏலம் விடப்படும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை கைது செய்வதையும், படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் இலங்கை அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில் பல்வேறு காலகட்டங்களில் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விடபோவதாக இலங்கை அரசு அறிவித்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காரைநகரில் 65 படகுகள், காங்கேசன்துறையில் 5 படகுகள், கிராஞ்சியில் 24 படகுகள், தலைமன்னாரில் 9 படகுகள் , கல்பிட்டியில் 2 படகுகள் என மொத்தம் 105 படகுகள் ஏலம் விடும் பணி பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11ஆம் தேதிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக படகுகளை ஏலம் விடுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கை அரசு அறிவித்தப்படி இன்று(பிப்ரவரி 7) யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் கடற்படை முகாமில் உள்ள 65 படகுகள் ஏலம் விடும் பணி காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பிலுள்ள இலங்கை மீன்வளத் துறை உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நாகை, காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்களின் காவலை பிப்ரவரி 21 வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 7 பிப் 2022