sகிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ புளிக்குழம்பு

public

ான் – வெஜ் சாப்பிடுபவர்கள் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் அயிரை மீனை நினைத்துக்கொண்டே இந்த வாழைப்பூ புளிக்குழம்பு ஊற்றிச் சாப்பிடுவது, ஒரு மாறுதலான, ஆறுதலான விஷயமாக இருக்கும். மீன் குழம்பு வாசனையுடன் பார்ப்பதற்கும் ‘அயிரை மீன்’ குழம்பு மாதிரி அட்டகாசமான சுவையுடன் இருக்கும் இந்த வாழைப்பூ புளிக்குழம்பு சாதத்துக்கு ஊற்றிச் சாப்பிட சுவையானது.
**என்ன தேவை?**
வாழைப்பூ – 2
புளி – ஒரு சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சின்ன வெங்காயம் – 5 அல்லது 6
பூண்டு – 2 பல்
மஞ்சள்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
முதலில், வாழைப்பூவை உரித்து, துவர்க்கும் பூ இதழ்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட வேண்டும். பூவின் ‘சீப்பு’ போன்ற பகுதி, கலர் மாறிய வெள்ளையாகக் குருத்து மாதிரி வந்தவுடன், அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்து சேகரித்துக்கொள்ளவும். இந்தப்பூவில் ‘கள்ளன்’ என்ற நார்கூட இருக்காது. வாழைப் பூவின் குருத்து மொட்டு வரும் வரை உரித்து, சேகரித்துக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் இந்தப் புளிக்கரைசலில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். குழம்பு கொதிக்கும்போது உப்பையும் பெருங்காயத்தூளையும் சேர்த்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றவும். குழம்பு கொதித்து, நல்ல வாசனை வரும். அப்போது உரித்த வாழைப்பூவைப் போட்டு, குழம்பை வற்றவிடவும். வாழைப்பூ சீக்கிரம் வெந்து விடும்.

**[நேற்றைய ரெசிப்பி: மிளகாய்க் குழம்பு](https://www.minnambalam.com/public/2022/02/04/1/chilly-kolambu)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *