மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 பிப் 2022

வனப்பகுதிக்குள் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை!

வனப்பகுதிக்குள் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை!

வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வனத் துறை தடை விதித்துள்ளது.

பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் மற்றும் பல்வேறு வனவிலங்குகளும், அரிய வகை தாவர இனங்களும் உள்ளன.

இந்த நிலையில் தற்போது மழை பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் உயர்ந்து வருவதால் வனப் பகுதி பசுமையை இழந்து வருகிறது. வனப்பகுதி வறண்டதால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நீரோடைகளில் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

எனவே சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பொருட்களால் வனப்பகுதியில் தீப்பிடிப்பதைத் தடுக்க ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குநர் கணேசன் ஆகியோரது உத்தரவின் பேரில் வனத்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் ஆழியாறு வனத் துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் வனவர் சதீஷ், வனத் துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பேசியுள்ள வனத் துறையினர், “வனப் பகுதியில் காட்டு தீப்பிடிப்பதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வனத் துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் இலைகள் உதிர்ந்து மரங்கள் காய்ந்து விட்டன.

எனவே, சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு வரக் கூடாது. விதிமுறைகளை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 4 பிப் 2022