மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 பிப் 2022

நெல்லை பள்ளி விபத்து : பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து!

நெல்லை பள்ளி விபத்து : பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து!

நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளியின் தாளாளர் உட்பட 2 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளியின் தாளாளா் செல்வகுமார், தலைமையாசிரியர் எஸ்.பி பொசிஸ் ஞானசெல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில்,” இந்த விபத்து நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே நாங்கள் பணியில் சேர்ந்தோம். அதனால் இந்த விபத்திற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. அதனால் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வந்தார். மனுதாரர்கள் கூறுவது உண்மையா என்பது குறித்து விசாரணை நடத்தி பதிலளிக்குமாறு காவல்துறைக்கு கடந்தமுறை விசாரணையின்போது உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை ஆகிய இருவரும் இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே பொறுப்பேற்றுள்ளனர். அதனால், 15 வருடத்திற்கு முன்னதாக கட்டப்பட்ட கட்டடம் இடிந்து விழுந்த விபத்திற்கு அவர்கள் பொறுப்பேற்க முடியாது என்று கூறி அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

-வினிதா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 4 பிப் 2022