மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

இந்தியன் ஆயில் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வழங்க உண்மையான காரணம்?

இந்தியன் ஆயில்  இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வழங்க உண்மையான காரணம்?

இலங்கை அரசுக்கு ரூ.6,700 கோடி கடனுதவி வழங்குவதாக ஏற்கெனவே இந்தியா அறிவித்துள்ள நிலையில் 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இதை சமாளிக்க பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்று வருகிறது. கடந்த மாதம் உணவுப்பொருள் இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசுக்கு ரூ.6,700 கோடி கடனுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு தேவையான எரிபொருட்களை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்கப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் எரிபொருள் இல்லாமல் அனல்மின் நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு முழுவதும் முக்கிய நேரங்களில் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 41 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதேசமயம் இலங்கை அரசுக்கு சிலோன் பெட்ரோலியம் கழகம் (Ceylon Petroleum Corporation), அந்நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான பாங்க் ஆஃப் சிலோன் (Bank of Ceylon), மக்கள் வங்கி (People's Bank) ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி நிற்கிறது. மேலும், ‘பொருளாதார அடிப்படையில் இலங்கையின் எரிசக்தி கையிருப்பு, வரும் ஜனவரி மாதம் வரையில் மட்டுமே இருக்கும்' என அந்த நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்த நிலைமையைச் சீர் செய்ய, நாட்டின் எரிபொருள் தேவைக்காக பெட்ரோல், டீசலை வழங்குமாறு இலங்கை அரசு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சு வார்த்தையில் இலங்கைக்கு சுமார் 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கைக்கு அவசரகால உதவியாக இந்தியா ரூ.3,737 கோடி கடன் வழங்கும் ஒப்பந்தம் நேற்று (பிப்ரவரி 2) கையெழுத்தானது. இந்தியா தற்போது வழங்கும் கடன், அந்நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடியை ஓரளவு தணிக்கும் என்று கருதப்படுகிறது.

-ராஜ்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 3 பிப் 2022