மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

சென்னையில் புத்தக கண்காட்சிக்கு அனுமதி!

சென்னையில் புத்தக கண்காட்சிக்கு அனுமதி!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு 45வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ நந்தனம் வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 900 ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. புத்தக் கண்காட்சிக்கான அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. வாசகர்களும் சென்னை புத்தக் கண்காட்சியை எதிர்நோக்கி ஆர்வமாக இருந்தனர்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து இருந்ததால், புத்தக கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்தது. வாசகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்த நிலையில், பதிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, பள்ளி,கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இந்தநிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர், தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்தில், ” கடந்த 2021ஆம் ஆண்டு இதே கொரோனா பெருந்தொற்று சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எந்தவித பாதிப்பும் இல்லாமல் புத்தகக் கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் இந்தாண்டு நிறுத்தி வைக்கப்பட்ட புத்தக கண்காட்சியை பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதிவரை நடத்திக் கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு 1000 கடைகளை 800 கடைகளாக மாற்றி அமைக்கப்பட்டு நடத்த அனுமதி கோருகிறோம். நோய்த்தொற்று பரவாமலிருக்கும் வண்ணம் சில கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, சென்னையில் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு பதிப்பகங்கள், புத்தக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

வியாழன் 3 பிப் 2022