மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 பிப் 2022

உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை உயரும்?

உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை உயரும்?

கடந்த 90 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் திடீரென கச்சா எண்ணெய் விலையைக் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020இல் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பல நாடுகளில் முழுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனால் மக்கள் யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை உருவானது. விமானப் போக்குவரத்து உட்பட அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் மீதான தேவை குறைந்தது. அப்போது கச்சா எண்ணெய் விலை மைனஸில் வர்த்தகமானது.

அன்றிலிருந்து இன்று வரை கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக சீரடையாத நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றத்தால் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதால், ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி தடைபடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென விலையை உயர்த்தியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.11% உயர்ந்து, 91.03 டாலராக விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 0.33% உயர்ந்து, 87.15 டாலராக வர்த்தகம் ஆகிறது.

டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மூலப்பொருளாக இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்திய அரசாங்கம் தற்போது வரியைக் குறைத்து விலையை கட்டுக்குள் வைத்திருப்பதுபோல, இனி எதிர்வரும் காலங்களிலும் அதே நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டால், இதே விலையில் பெட்ரோல் டீசல் விலை வர்த்தகமாக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், ஐந்து மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, கச்சா எண்ணெய் விலை குறையாமல் இருக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசாங்கம் கட்டாயம் உயர்த்தவே செய்யும் என்று தெரிகிறது.

-ராஜ்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

புதன் 2 பிப் 2022