மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 பிப் 2022

அரசு அலுவலகங்களில் சிசிடிவி கோரி மனு : மனுதாரருக்கு அபராதம்!

அரசு அலுவலகங்களில் சிசிடிவி கோரி மனு : மனுதாரருக்கு அபராதம்!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து வகை சான்றிதழ்களை பெற லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் வழங்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகை கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி உயர் அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், பொதுநல வழக்கு முறையாக தாக்கல் செய்யவில்லை. விளம்பரத்துக்காக தாக்கல் செய்ததால் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தவித பொதுநல வழக்கும் தொடரக்கூடாது என மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 2 பிப் 2022