மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 பிப் 2022

கட்டுப்பாடுகள் தளர்வு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கட்டுப்பாடுகள் தளர்வு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஒமிக்ரான் அலை இன்னும் பல நாடுகளில் உச்சக்கட்டத்தை கடக்கவில்லை என்பதால், அனைத்து நாடுகளும் ஒரே நேரத்தில் கட்டுப்பாடுகளை நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,”பத்து வாரங்களுக்கு முன்பு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து 90 மில்லியன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020 ஆம் ஆண்டு முழுவதும் பதிவாகியதை விட அதிகமாகும். தற்போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரிப்பு கவலை அளிக்கிறது.

ஒமிக்ரான் விஷயத்தில் அதிக பரவுதல் என்பது இறப்புகளைக் குறிக்கிறது. அதனால் அனைத்து நாடுகளிலும் திரும்பவும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசியுடன் மற்ற நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதனால், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு விட்டோம், இனி கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று எந்த நாடும் அறிவிப்பது சரியல்ல” என்று தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “கடந்த ஏழு நாட்களில் மட்டும் 22 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த நான்கு வாரங்களில் உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்கக் கூடிய ஆயுதங்கள் நம்மிடம் இருக்கையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கிறது.

பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளன. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் தளர்த்துவதற்கு இது நேரமல்ல. ஒவ்வொரு பகுதி பகுதியாகதான் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். ஏனெனில் இந்த வைரஸ் மிகவும் ஆற்றல் வாய்ந்தது” என்று கூறினார்.

அதுபோன்று ஒமிக்ரான் வைரஸை விட அதன் மரபணு மாறிய துணை திரிபான பி.ஏ.,-2 வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போதுவரை 57 நாடுகளில் பரவியுள்ளது. துணை திரிபுகள் இடையேயான மாறுபாடுகள் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அதன் வீரியம், பரவும் தன்மை ஆகியவை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் 959 பேரும், நேற்று 1192 பேரும் பெருந்தொற்று காரணமாக பலியான நிலையில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 1700ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 2 பிப் 2022