டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் ஆதாரை இணைக்க காலக்கெடு!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு எண்ணுடன் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாத நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்வுக்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில்,”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தெரிவு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு,தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுகுறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால்,18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது இதன் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினிதா