மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வு!

முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வு!

நாமக்கல்லில் ரூ.4.40 ஆக இருந்த முட்டை விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகளைத் தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து முட்டை விலையிலும் மாற்றம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரிகூடி முட்டை விலையை நிர்ணயிப்பது வழக்கம். அதன்படி நேற்று (ஜனவரி 31) முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஏற்கனவே ரூ.4.40 ஆக இருந்த முட்டை விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:

சென்னை - 4.60, பெங்களூரு - 4.55, டெல்லி - 4.77, ஹைதராபாத் - 4.11, மும்பை - 4.73, மைசூர் - 4.35, விஜயவாடா - 4.20, ஹொஸ் பேட் - 4.40, கொல்கத்தா - 4.88.

தற்போது சென்னை போன்ற பெருநகரங்களின் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 5.50 ஆக விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

செவ்வாய் 1 பிப் 2022