மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: தட்டைப்பயறு குழம்பு

கிச்சன் கீர்த்தனா: தட்டைப்பயறு குழம்பு

கொரோனா பரவலுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரியமான உணவுகளின் மீதான நாட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சாதத்துக்கேற்ற பாரம்பரியமான குழம்பு இது. பழைய சாதத்துக்கும் மிகவும் சுவையாக இருக்கும். உணவே மருந்து என்ற அடிப்படையை நிலைநாட்டும்.

என்ன தேவை?

தட்டைப்பயறு (சிவப்பு காராமணி) - 100 கிராம்

வெங்காயம் - ஒன்று

தக்காளி (பெரியது) - ஒன்று

கத்திரிக்காய் (இளசாக) - 3

முருங்கைக்காய் - ஒன்று

பூண்டு - 2 பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

புளி - கொட்டைப்பாக்கு அளவு

மஞ்சள்தூள் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு

தேங்காய் (துருவியது) - 2 டேபிள்ஸ்பூன்

குழம்பு மசாலாப்பொடி - 2 டீஸ்பூன்

பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து, சூடானதும் தட்டைப் பயற்றை குக்கரில் போட்டு, எண்ணெய் ஊற்றாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க வறுபட்டதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, வேகவைக்கவும். ஐந்து விசில் வந்தவுடன், திறந்து பார்த்தால், உடையாமல் வெந்து இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, கடுகைப் போட்டு அது வெடித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு, அதன் பிறகு வெங்காயத்தையும் பூண்டுப் பல்லையும் போட்டு வதக்கவும். பின்பு கறிவேப்பிலையைச் சேர்த்து, நறுக்கிவைத்த கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும். இந்தக் காய்கள் எண்ணெயில் கலந்து வதங்க ஆரம்பித்ததும், வேகவைத்த தட்டைப் பயற்றில் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்து வைத்த மசாலா விழுதையும், தேவையான அளவு உப்பையும் மஞ்சள்தூளையும் சேர்த்துவிடவும். பின்பு, கரைத்துவைத்த புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்தவுடன் திறந்து பார்க்கவும். நாம் ஊற்றிச் சாப்பிடும் அளவு குழம்பு தளர இருந்தால், கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டுப் பரிமாறவும். இன்னும் கொஞ்சம் குழம்பு தேவையானால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

குறிப்பு

தட்டைப்பயறு குழம்பு வைக்கும்போது, அரைக்கீரைக் கடையலும் தேங்காய்த் துவையலும் அப்பளப்பூ என்று சொல்லக்கூடிய சுருள் அப்பளமும் செய்து சாப்பிட, மணமும் சுவையும் ஊரையே கூட்டும்.

நேற்றைய ரெசிப்பி: சோயா பீன்ஸ் குழம்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

செவ்வாய் 1 பிப் 2022