மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 ஜன 2022

பள்ளிகள் திறப்பு: நேரடி வகுப்புகளுக்கே முக்கியத்துவம்!

பள்ளிகள் திறப்பு: நேரடி வகுப்புகளுக்கே முக்கியத்துவம்!

நாளை தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி,கல்லூரிகளை திறக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பினால் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம். ஆனால் நேரடி வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்தமுறை போன்று சுழற்சி வகுப்புகள் இல்லாமல் தினமும் வழக்கம்போல், பள்ளிகள் செயல்படும்.

தகுதிவாய்ந்த அனைத்து ஆசிரியர்களும் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பள்ளி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கொரொனா வழிமுறைகளை கடைப்பிடித்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து அமர்வதை தவிர்க்க வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட கொரனோ அறிகுறிகள் தென்படும் மாணவர்களை உடனே தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் கட்டாயம் உறுதி செய்யவேண்டும். மாணவர்கள் வருவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித்தனியாக வழிகளை உருவாக்கிக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்புதல்தேர்வு

தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான புதிய அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15ஆம் தேதி வரையிலும், இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16ஆம் தேதி வரையிலும், இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 31 ஜன 2022