மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 ஜன 2022

குறைவான விலையில் பருத்தி ஏலம்: விவசாயிகள் சாலை மறியல்!

குறைவான விலையில் பருத்தி ஏலம்: விவசாயிகள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் விலை குறைவாக பருத்தி ஏலம் விடப்பட்டதாகக் கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொங்கணாபுரத்தில் இயங்கி வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொள்வார்கள்.

நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 8,500 பருத்தி மூட்டைகள் 2,050 லாட்டுகளாக வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.3.5 கோடிக்கு ஏலம் போனது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.9,600 முதல் அதிகபட்சமாக ரூ.10,629 வரையும், டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10, 650 முதல் ரூ.14,569 வரையும் ஏலம் போனது. இது கடந்த வாரம் நடந்த ஏலத்தைவிட ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை குறைவாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து விவசாயிகள் பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ.5,00 வரை அதிகமாக தர வேண்டும் என்று எடப்பாடியில் கொங்கணாபுரம் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றனர். இதையடுத்து சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்தச் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-ராஜ்

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 31 ஜன 2022