மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 ஜன 2022

கொரோனா வார்டிலிருந்து தப்பியோடிய கைதி!

கொரோனா வார்டிலிருந்து தப்பியோடிய கைதி!

கோவை அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2020 ஜூலை மாதம் நல்லாம்பாளையம், டவுன்ஹால், ரயில்நிலையம் ஆகிய பகுதிகளில் நான்கு சிறிய கோயில்கள் அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக, கஜேந்திரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 28) இரவு சிறை கைதிகளுக்கான கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் தற்போது பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

-வினிதா

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 29 ஜன 2022