மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

சத்தியமங்கலம் சரணாலய இயக்குநருக்கு உத்தரவு!

சத்தியமங்கலம் சரணாலய இயக்குநருக்கு உத்தரவு!

வாகனங்கள் மோதி விலங்குகள் பலியாவதை தடுக்கக் கோரிய வழக்கில், சத்தியமங்கலம் பண்ணாரி-திம்பம் சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் வாகனங்கள் மோதி உயிரிழப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(ஜனவரி28) நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தீரஜ்குமார், தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் பண்ணாரி - திம்பம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து 2019 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், கர்நாடகாவை இணைக்கும் இந்த சாலையில் 17 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தெரிவித்தார்.

காணொலி காட்சி மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, இந்த சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களுக்கும், இரவு 9 மணி முதல் 6 மணி வரை இதர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அவசரம் உள்ளிட்ட காரணங்களை கூறி இந்த தடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுவதாகவும் தெரிவித்தார்.

மருத்துவ அவசரம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுடன் பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் கூட்டம் நடத்தி, 24ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் புலிகள் சரணாலய கள இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வனப்பகுதி சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கேமராக்களை பொருத்தி, அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 28 ஜன 2022