மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

இந்தியாவில் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை முன்னணி வகித்து வருகின்றன. முன்னாடி எல்லாம் பத்து ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்யும் வசதி இருந்தது. அதுபோன்று ரீசார்ஜ் செய்த பேலன்ஸ் தீர்ந்துபோகும்வரை வேலிடிட்டி இருக்கும். இதன் காரணமாக ஒருசிலர் ஒருவருடத்திற்கு கூட அந்த பேலன்ஸை வைத்திருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். அப்போது செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சேவை நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி அள்ளி தந்தன. செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, செல்போன் நிறுவனங்கள் அனைத்து சேவை திட்டங்களையும் மாற்றியது.

கட்டண உயர்வு மற்றும் 28 நாட்களுக்குள் பேலன்ஸை முடிக்க வேண்டும் உள்ளிட்டவற்றினால் ப்ரீபெய்டு திட்ட பயனாளிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். குறிப்பாக கிராமத்தில் இருப்பவர்கள், அதிகமாக செல்போனில் பேசாதவர்கள் எல்லாம் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். தற்போது குறைந்தபட்ச ரீசார்ஜே 99 ஆக உள்ளது.

இதுதொடர்பாக பல புகார்கள் வந்த நிலையில், தற்போது டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) வெளியிட்ட அறிவிப்பில், ”ப்ரீபெய்டு கட்டணத் திட்டத்தை 30 நாட்களுக்கு, அதாவது முழு மாதத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிர்ணயிக்க வேண்டும். அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்தபட்சம் 30 நாட்கள் செல்லுப்படியாகும் சாதாரண ரீசார்ஜ் திட்டம், ஒரு சிறப்பு கட்டண திட்டம், ஒரு காம்போ திட்டத்தையாவது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

30 நாள்கள் செல்லுபடியாகும் திட்ட விவரங்கள் தொடர்பான அறிக்கையை, இந்த உத்தரவு தொடர்பான அறிக்கை வெளியான நாளிலிருந்து 60 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராயின் இந்த அறிவிப்பு மூலம் இனி வருடத்திற்கு ரீசார்ஜ் செய்யும் முறை 13லிருந்து 12ஆக குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மாதாந்திர ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 28 ஜன 2022