மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 ஜன 2022

ஞாயிறு ஊரடங்கு: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வாரச்சந்தை வியாபாரிகள்!

ஞாயிறு ஊரடங்கு: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வாரச்சந்தை வியாபாரிகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சி வாரச்சந்தை சிறு வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். குறிப்பாக பொன்மலை வாரச்சந்தை வியாபாரிகள், சமயபுரம் ஆட்டுச்சந்தை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பேசியுள்ள பொன்மலை வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் அசோக், "தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் வாரச்சந்தை வியாபாரிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பொன்மலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபோடும் காய்கறி வியாபாரிகள் தற்போது கிராமங்களில் சாலையோரம் கடை விரித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆகவே தமிழக அரசு தளர்வுகளுடன் வாரச்சந்தைகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ராஜசேகர் என்ற வியாபாரி, "தொடர் ஊரடங்கால் இருப்பு வைத்துள்ள மளிகை பொருட்கள் காலாவதி ஆகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவந்து எங்களை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் விதிமீறல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை திருச்சி மாவட்டத்தில் 697 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கில் பல்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டு இளைஞர்கள் ஊர் சுற்றுவதாகவும் இதனால் மேலும் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 26 ஜன 2022