மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 ஜன 2022

மேலும் 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை!

மேலும் 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை!

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், கூடுதல் விலையில் விற்கப்படுவதாகவும் அரசுக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

இந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மாமண்டூரில் உள்ள பயணவழி உணவகம் மற்றும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், தரமற்ற, சுகாதாரமற்ற உணவு வழங்கியது, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு ஒப்பந்ததாரருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

ஒருவார கால அவகாசம் அளித்தும், சம்பந்தப்பட்ட உணவகம் குறைகளை சரிசெய்யாததால், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், ஜனவரி 25ஆம் தேதி (நேற்று) முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டது.

தற்போது மேலும் 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழு, போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிற்கும் நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வின்போது, விக்ரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட உணவகங்களில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 26 ஜன 2022