மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 ஜன 2022

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இலவச பயணம்: போக்குவரத்து துறை எச்சரிக்கை!

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இலவச பயணம்: போக்குவரத்து துறை எச்சரிக்கை!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(விழுப்புரம்), அனைத்து மண்டல ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,”நமது கழக பேருந்துகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்(Ex-MLA) மற்றும் அவர்களின் மனைவி,கணவர்,உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள பேருந்துகளில் அனுமதிப்பதில்லை எனவும், அவர்களுக்கு உரிய இருக்கை வழங்கப்படுவதில்லை எனவும் புகார்கள் தெரிவிக்கப்படுகிறது.

எனவே,அனைத்து மண்டல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பணியின் போது நமது கழக பேருந்துகளில்(ஏசி பேருந்து உட்பட) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) மற்றும் அவர்களின் மனைவி,கணவர்,உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு புகார் பெறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

செவ்வாய் 25 ஜன 2022