மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 ஜன 2022

கடனை அடைக்க குழந்தை விற்பனை: மூவர் கைது!

கடனை அடைக்க குழந்தை விற்பனை: மூவர் கைது!

திருச்சியில் சூதாட்டம் மூலம் ஏற்பட்ட கடனை அடைக்க குழந்தையை விற்ற தந்தை உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை கடத்தி பணத்துக்காக விற்பது ஒருபுறம் அதிகரிக்க, மற்றொரு புறம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பணத்துக்காக விற்பதும் அதிகரித்து வருகிறது.

திருச்சி மாவட்டம் உறையூர் காந்திபுரம் தேவர் காலனியை சேர்ந்தவர் அப்துல்சலாம் (40). இவரது மனைவி கைருன்னிசா (36). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், கூலித்தொழிலாளியான அப்துல்சலாம், சரிவர வேலைக்கு செல்லாமல் அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். இதற்காக தொடர்ந்து கடன் வாங்கி அதிகளவில் கடனாளி ஆனார். ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அப்துல்சலாமை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். அந்தவகையில் சலாமுக்கு ரூ.80 ஆயிரம் கடன் கொடுத்த தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ஆரோக்கியராஜூம் கொடுத்த கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

பின்பு, கடனை திருப்பி தர வேண்டாம். அதற்கு பதிலாக தன்னுடைய உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லாததால் தற்போது புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையைத் தர வேண்டும் என்று ஆரோக்கியராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து அப்துல்சலாம் தனது மனைவியிடம் பேசி எப்படியோ அவரின் மனதை மாற்றினார். இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி குழந்தையை ஆரோக்கியராஜிடம் விற்றுவிட்டனர்.பின்பு, அந்த குழந்தையை ஆரோக்கியராஜ், தனது உறவினரான சந்தானமூர்த்தியிடம் கொடுத்துவிட்டார்.

குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் இருந்த கைருன்னிசா, குழந்தை தனக்கு வேண்டும் என்று கணவரிடம் அழுதுள்ளார். ஆனால், அவர் இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தன்னுடைய குழந்தையை மீட்டு தரும்படி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்ற தந்தை அப்துல் சலாம்,புரோக்கராக செயல்பட்ட ஆரோக்கியராஜ் மற்றும் குழந்தையை வாங்கிய சந்தான மூர்த்தி ஆகியோரைக் கைது செய்து மணப்பாறை கிளைச்சிறையில் அடைத்தனர். மூன்று பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், காவல்துறையினர் விற்கப்பட்ட குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

வினிதா

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 24 ஜன 2022