மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 ஜன 2022

நீர்நிலை ஆக்கிரமிப்பு: வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு: வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை!

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைக் கண்டறிந்து, அதன் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி தற்போது ஆக்கிரமிப்பில் இருந்த நீர்நிலைகள், நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, தனது சொத்துக்கான மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜனவரி 22) நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்குக்கான காரணத்தை கேட்டவுடனே, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து பேசிய நீதிபதி, “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் வருவாய் துறை அலுவலர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீதித் துறை தனது வாளை சுழற்றினால்தான், வாழ்வாதாரமான நீருக்கு பஞ்சம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். நீரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல முடியும்” என்று உத்தரவிட்டார்.

வருவாய் துறை அலுவலர்கள், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கு உடந்தையாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வருவாய் நிர்வாக ஆணையரை எதிர் மனுதாரராக சேர்த்து, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 23 ஜன 2022