மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

புதிய விரைவு ரயில்: தெற்கு ரயில்வே மறுப்பு!

புதிய விரைவு ரயில்: தெற்கு ரயில்வே மறுப்பு!

மதுரையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை புதிய ரயில் இயக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை புதிய விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் பெயரில் சுற்றறிக்கை ஒன்று நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பலரும் உண்மை என்று நம்பி கொண்டிருந்த நிலையில், இது உண்மை அல்ல என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெற்கு ரயில்வே,”MDU மற்றும் MTP இடையே ரயில் அறிமுகம் குறித்த தெற்கு ரயில்வே அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அத்தகைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எங்களால் வெளியிடப்படவில்லை என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்துகிறோம். மேலும், இது நேர்மையற்ற நபர்களின் இழிவான செயலாகத் தெரிகிறது. தவறான தகவல்களை சமூகவலைத்தளங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர். இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 21 ஜன 2022