மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

சென்னையில் பாதிப்பு குறைகிறது: மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் பாதிப்பு குறைகிறது: மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று(ஜனவரி 21) செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்னும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் பாதிப்பை மேலும் குறைக்க முடியும். முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். இல்லையெனில் தொற்று எளிதாக பரவும். அதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால்தான் மக்கள், தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் காப்பாற்றி கொள்ள முடியும். சளி, காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பாதிப்புகள் இருந்தால் 1913 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும். அதே நேரத்தில் சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்றி தாங்களாகவே மருந்து கேட்டு வரும் நபர்களின் விவரங்களை மருந்தக ஊழியர்கள் சேகரித்து வைத்து மாநகராட்சிக்கு வழங்கினால் அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் சரியான முகவரி, செல்போன் எண் அளித்தால் அவர்களுக்கு நல்லது. அப்போது தான் தினசரி நலம் விசாரிப்பு மற்றும் களப்பணியாளர்கள் மூலம் கண்காணிக்க முடியும். தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா விவரங்களை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,”கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனுடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாளை வழக்கமான தடுப்பூசி முகாம் நடைபெறும். அரசின் நடவடிக்கைகளுடன் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொற்றை குறைக்க முடியும். கொரோனா தொற்று மக்கள் கையில்தான் உள்ளது” என்று கூறினார்.

சென்னையில் தெருநாய்களால் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 21 ஜன 2022