மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 ஜன 2022

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதிமுக பிரமுகரை போலீசார் இன்று கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. பூலாம்பாடியைச் சேர்ந்த வினோத் என்பவர் அதிமுக நகர செயலாளராக உள்ளார். இவர் அங்கு கேஸ் ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வரும் திருமணமான பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். அந்த பெண் நிறுவனத்துக்கு போகும்போதும், வரும்போதும் வழிமறித்து ஆபாசமாக பேசுவதுடன், செல்போன் மூலமும் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அப்பெண் சாலையில் செல்லும்போது வழிமறித்து, தன் ஆசைக்கு இணங்க மறுப்பு தெரிவித்தால், கேஸ் கம்பெனியோடு உன்னையும் எரித்து கொலை செய்துவிடுவேன் என்று வினோத் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த பாதிக்கப்பட்ட பெண், அரும்பாவூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் வினோத் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வினோத் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், பாலியல் தொல்லை உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அவரை கைது செய்த போலீசார், இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 20 ஜன 2022