மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற உத்தரவு!

முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற உத்தரவு!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் 500 ஆக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 23 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் எனும் புதிய திரிபு காரணமாக மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், அலுவலகங்களில் முகக்கவசம் அணியாதவர்களை தனியார் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

தொற்று அறிகுறி உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

300 பேருக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.

பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும். அவ்வாறு இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.200லிருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 19 ஜன 2022