மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிற நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கான தடை வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் ஏறுமுகத்தில் இருந்தபோது நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்காக வந்தே பாரத் ரயில் மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவதற்கான வேலைகள் நடந்தன. டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நாட்டில் ஒமிக்ரான் எனும் புதிய திரிபு பரவ ஆரம்பித்து, அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனால், சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குவது ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 2.83 லட்சமாக அதிகரித்துள்ளதால் விமான போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று(ஜனவரி 19) விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சர்வதேச விமான போக்குவரத்து சேவை மீதான தடை பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 11.59 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், விமான கட்டுப்பாட்டரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 19 ஜன 2022