மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காலநிலை மாற்ற மையத்தின் சென்னை இயக்குநராக இருந்தவர் செந்தாமரைக்கண்ணன். அவரது இடத்துக்கு தற்போது புவியரசன் மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாகச் சென்னையில் பெய்த மழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சென்னை முழுவதிலும் உள்ள சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தன. பொதுவாக மழைக்காலத்தில் மாநில அரசுகள் வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை அறிவிப்பைத் தொடர்ந்து தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ஆனால், சென்னையில் பெய்த பெருமழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அப்போது விளக்கமளித்த புவியரசன், நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து இவ்வளவுதான் கணிக்க முடியும். போதுமான ரேடார் வசதிகள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், பெருமழை, புயலை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்தச்சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

-பிரியா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 17 ஜன 2022