மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவது எப்போது?

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவது எப்போது?

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதுவரை 157 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், 12 -14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குப் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “15 முதல் 17 வயது வரை உள்ள மொத்தம் 3.31 கோடி குழந்தைகளுக்கு ஏற்கனவே முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி 13 நாட்களில் 45 சதவிகிதம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

ஜனவரி இறுதிக்குள் 15-17 வயதிற்குட்பட்ட 7.4 கோடி பேருக்கு முதல் டோஸ் போடுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இதன் மூலம் பிப்ரவரி தொடக்கத்திலிருந்து இரண்டாவது டோஸ் போடுவதைத் தொடங்கி பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க முடியும்.

அப்படியானால், பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இளம் பருவத்தினருக்குத் தடுப்பூசி போடப்படுவது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள அவர், அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று ஒருவரோடு ஒருவர் இணைந்து இருப்பதால், தொற்றுநோயைப் பெறுவதற்கான அதிக ஆபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக கொரோனா வைரசின் வேகமான ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்படலாம். அதனால் அவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

-பிரியா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 17 ஜன 2022