மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 ஜன 2022

மாஸ்க் : சென்னையில் ரூ.9,92,400 அபராதம் வசூல்!

மாஸ்க் :  சென்னையில் ரூ.9,92,400 அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கான அபராதம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், சென்னையில், கடந்த ஜனவரி 14 அன்று இரவு நேர ஊரடங்கில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 302 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முகக்கவசம் அணியாதது தொடர்பாக 4962 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.9,92,400 அபராதமும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10,500 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

சென்னை முழுவதும் மொத்தம் 312 வாகன தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

14.01.2022 அன்று இரவு 10.00 மணி முதல் 15.01.2022 அன்று காலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 281 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் மற்றும் 07 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 302 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

எனவே, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது சென்னை காவல்துறை.

-பிரியா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 16 ஜன 2022