மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 ஜன 2022

திருப்புதல் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அறிவுரை!

திருப்புதல் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அறிவுரை!

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கின்றன. தற்போது இந்த மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் உள்ளனர்.

விடுமுறை முடிந்து வரும் 19 ஆம் தேதி 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் 10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒரு அறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைக்க வேண்டும். விடைத்தாள்களில் பள்ளியின் பெயர், முத்திரை, மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோன்று முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 16 ஜன 2022