மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

கொரோனா நோயாளிகளின் பொங்கல்!

கொரோனா நோயாளிகளின் பொங்கல்!

நேற்று தை திருநாளான முதல் நாளில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையிலே குளித்து புத்தாடை அணிந்து, சூரிய பகவானை வணங்கி, வாசலில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சிறந்த முறையில் பொங்கலை மக்கள் கொண்டாடினர். அதுபோன்று காவல்துறையினரும் தங்கள் காவல் நிலையங்களில் ஒரே மாதிரியான வண்ணங்களில் சேலை,வேட்டி அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இவ்வாறு ஒவ்வொரு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மையங்களில் இருப்பவர்களும் பொங்கலை கொண்டாடியுள்ளனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பொங்கல் விழாவையொட்டி அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், கொடிசியா வளாகத்திற்குள்ளேயே வண்ண கோலமிட்டு, கரும்புகளால் அலங்கரித்து, சிகிச்சை பெறுவோருக்கு உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களைக் கொண்டு கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்தனர். பின்பு பொங்கல் பானையை சுற்றி கும்மி பாட்டு பாடி, பாரம்பரிய முறையில் பொங்கலை கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றினர்.

தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற கவலையை மறந்து, உறவினர்களுடன் பொங்கலை கொண்டாட முடியவில்லையென்றாலும், புதிய அறிமுகங்களுடன் சந்தோஷமாக கொரோனா நோயாளிகள் பொங்கலை கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், பால் கொடுக்கும் பசுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இன்று வீடுகளில் உள்ள பசுக்கள் மற்றும் காளைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து அவற்றுக்கு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சனி 15 ஜன 2022