மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

ஜனவரி 17இல் ரேஷன் கடைகள் இயங்கும்!

ஜனவரி 17இல் ரேஷன் கடைகள் இயங்கும்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் ஜனவரி 17ஆம் தேதி இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொங்கல்பண்டிகையைத் தொடர்ந்து வருகிற ஜனவரி 16ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதாலும் , ஜனவரி18 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட ஜனவரி 17 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தன. இதனையடுத்து ஜனவரி 17 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக பிப்ரவரி 4ஆம் தேதி கடைகள் இயங்கும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி விடுமுறையை ரத்து செய்வதாகவும், அன்றைய தினத்தில் ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மற்ற ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் ஜனவரி 17இல் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

சனி 15 ஜன 2022