மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

பாலமேடு ஜல்லிக்கட்டு: பரிசு பெற்ற சிறுமி!

பாலமேடு ஜல்லிக்கட்டு:  பரிசு பெற்ற சிறுமி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்தும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு விளையாட்டு களத்துக்கு பார்வையாளர்கள் வருகை தருவர்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாகக் குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் லைவாக ஒளிபரப்பப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் #jallikattu என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இன்று மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

பின்னர் கோயில் காளை வாடிவாசலிலிருந்து சீறி பாய்ந்து வந்தது. இதையடுத்து அவித்துவிடப்படும் காளைகளை, காளையர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர்.

காளைகளை அடக்கும் காளையர்களுக்குத் தங்கக்காசு, குக்கர், சைக்கிள், இருசக்கர வாகனம், பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பரிசுகளும், முதல் பரிசு வெல்பவருக்கு காரும், சிறந்த காளைக்குக் காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மாலை 4 மணியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், மூன்று சுற்றுகள் வரை 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 90 மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர். இதில் 7 காளைகளை அடக்கி சிவசாமி என்பவர் முன்னிலையில் இருக்கிறார். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுபோன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கோபிநாத் என்ற காவலருக்குக் காலில் மாடு முட்டி காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் அன்னலட்சுமி என்ற சிறுமியும் தனது காளையை களம் இறக்கியிருந்தார். தொடர்ந்து விளையாட்டு களத்தில் நின்று காளையை உற்சாகப்படுத்தினார். அந்த மாடு காளையர்களால் பிடிபடவில்லை. பின்னர் அன்னலட்சுமிக்கு ஏர்கூலர் பரிசளிக்கப்பட்டது.

-பிரியா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 15 ஜன 2022