மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் வெஜ் ரைஸ்

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் வெஜ் ரைஸ்

ஒவ்வொரு நாளும் ‘இன்று என்ன சமைப்பது...' என்பதுதான் இல்லத்தரசிகள் மனத்தில் எழும் கேள்வி. எதையுமே திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். இதோ உங்களது கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் ஒரு உணவு என்கிற வரிசையில் சனிக்கிழமைக்கான சிறப்பு உணவு, மிகவும் எனர்ஜி தரும் ரைஸ்

என்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 200 கிராம்

முந்திரி - 20

உலர்ந்த திராட்சை - 20

சாரப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய குடமிளகாய் - ஒன்று

பேபி கார்ன் பொடியாக நறுக்கியது - ஒரு கிண்ணம்

பச்சைப்பட்டாணி - 100 கிராம்

பூண்டு பற்கள் - 10 (தோல் உரிக்கவும்)

சோம்பு - ஒரு டீஸ்பூன்

பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

நெய் - 100 மில்லி

எப்படிச் செய்வது?

அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு மடங்கு தண்ணீர் அளந்து ஊற்றி குக்கரில் இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு சூடாக்கி நறுக்கிய குடமிளகாய், பச்சைப்பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், பூண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி எடுக்கவும். அதேபோல முந்திரியையும் திராட்சையையும் தனியாக நெய்விட்டு வறுக்கவும். வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சாரப்பருப்பையும் தனியாக நெய்விட்டு வறுக்கவும். வேகவைத்த சாதத்துடன் வதக்கிய காய்கள், வறுத்த நட்ஸ் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

குறிப்பு: இதற்கு சைடிஷ் தேவை இல்லை. அதேபோல பிஸ்தா, வெள்ளரி விதைகள் போன்றவற்றையும் இதில் சேர்க்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: சாமை அரிசிப் பொங்கல்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

சனி 15 ஜன 2022