மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் தலையாய பிரச்சினை, அவர்கள் தினந்தோறும் சாலையில் சந்திக்கும் போக்குவரத்து நெரிசல்தான். சென்னை சாலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. இதன் காரணமாக பீக் டைம் என்று கூறப்படும் அனைவரும் அலுவலகம்,பள்ளி,கல்லூரி செல்லும் காலையிலும், அனைவரும் வீடு திரும்பும் மாலை நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக இருக்கும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னை மாநகராட்சியும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”சென்னை மாநகராட்சி சார்பில், தங்கு தடையின்றி போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலை - குக்ஸ் சாலை - பிரிக்ளின் சாலை; கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் முதல் பிரதான சாலை இடையே மேம்பாலங்கள் அமைக்க, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கணேசபுரம் சுரங்கப்பாதை, வடசென்னை வியாசர்பாடி பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக உள்ளது. தற்போதைய சுரங்கப்பாதை மையத்தடுப்பு இல்லாத இருவழி பாதையாகும். இந்த சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்பட உள்ள, புதிய மேம்பாலம், 142 கோடி ரூபாய் மதிப்பில், 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்தில், இருபுறமும் பயணிக்கும், நான்கு வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. கொன்னுார் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலை - குக்ஸ் சாலை - பிரிக்ளின் சாலை சந்திப்பானது, ஓட்டேரி நல்லா கால்வாய் பாலத்தில் சந்திக்கிறது. கொன்னுார் நெடுஞ்சாலை வில்லிவாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சந்திப்பில், கொன்னுார் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலையை இணைக்கும் வகையில், இருபுறமும் பயணிக்கும் இருவழிப்பாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பாலம், 62 கோடி ரூபாய் செலவில், 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. தி.நகர், தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் முதல் பிரதான சாலை இடையே, 131 கோடி ரூபாய் செலவில், 120 மீட்டர் நீளத்துக்கு, 8.4 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.இந்த மூன்று மேம்பாலம் கட்ட, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதியும், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு, 335 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 14 ஜன 2022