மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: ஒருவர் பலி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: ஒருவர் பலி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் திருநாளான இன்று(ஜனவரி14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பான முறையில் நடைபெற்றது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 150 பார்வயாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

வழக்கமாக ஒரு சுற்றுக்கு 75 முதல் 100 வீரர்கள் களத்தில் இறக்கப்படுவார்கள். ஆனால், இந்தாண்டு கொரோனா காரணமாக 30 வீரர்கள் மட்டுமே இறக்கப்பட்டனர்.

காலை 7.30 மணிக்கு தொடங்கி, ஏழு சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5.10 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் 641 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 300 காளையர்கள் பங்குபெற்றனர்.

போட்டியில் 24 காளைகளை அடக்கி கார்த்திக் என்பவர் முதலிடத்தையும், 19 காளைகளை அடக்கி முருகன் என்பவர் இரண்டாம் இடத்தையும், 11 காளைகளை அடக்கி பரத் என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்த கார்த்திக்கிற்கு அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக அளித்தார். அதுபோன்று சிறப்பாக விளையாடிய மற்ற வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஒருவர் பலி

ஜல்லிக்கட்டு போட்டியின்போது வீரர்களும், பார்வையாளர்களும் காயமடைவார்கள். அவனியாபுரம் ஜல்லிக்கட்டி போட்டியில் 59 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 26 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும், பார்வையாளர்கள் 11 பேரும் காயமடைந்தனர். இவர்களில் 17 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்த குட்டீஸ் என்பவரது மகன் பாலமுருகன்(18) காளைகள் வெளியேறும் இடத்தில் நின்றுக் கொண்டு போட்டியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வெளியேறிய காளை எதிர்பாராதவிதமாக பாலமுருகனின் இடது பக்க மார்பில் முட்டி குத்தியது. இதில் பலத்த காயமடைந்து சுய நினைவை இழந்த பாலமுருகனை உடனே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 14 ஜன 2022