மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

காளையர்களுக்கு அடங்காத காளைகள்!

காளையர்களுக்கு அடங்காத காளைகள்!

மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(ஜனவரி 14) காலை தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. நேற்று புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இன்று நடைபெற்று வரும் போட்டியில் 300 வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது நான்கு சுற்றுகள் முடிவடைந்து, ஐந்தாவது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் மூன்று மணிநேரம் வரை போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் சிறந்த காளைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பில் மோட்டார் சைக்கிளும் வழங்கப்படவுள்ளது. மேலும் தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதுவரை, மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் 15 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். 10 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதுவரை 26 பேர் காயமடைந்துள்ளனர். அதில் மேல் சிகிச்சைக்காக 4 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வெள்ளி 14 ஜன 2022