மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

ரிலாக்ஸ் டைம்: உருளைக்கிழங்கு காராசேவ்!

ரிலாக்ஸ் டைம்: உருளைக்கிழங்கு காராசேவ்!

உருளைக்கிழங்கில் சிப்ஸ், வறுவல் என்று சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு சற்று வித்தியாசமாக உருளைக்கிழங்கு காராசேவ் செய்து கொடுக்கலாம். உடனடி புத்துணர்ச்சியைப் பெறலாம்.

எப்படிச் செய்வது?

இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக்கொள்ளவும். ஆறு காய்ந்த மிளகாய், சிறிதளவு பெருங்காயம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். கால் டம்ளர் அரிசி மாவில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து... ஒரு டம்ளர் கடலை மாவு, அரைத்த மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் காராசேவு கரண்டியில் மாவைப் போட்டு நன்றாகத் தேய்த்து, பொரிந்தவுடன் எடுக்கவும்.

குறிப்பு: காய்ந்த மிளகாய்க்குப் பதில் காரத்துக்கேற்ப மிளகாய்த்தூளும் பயன்படுத்தலாம்.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 14 ஜன 2022