மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

கிச்சன் கீர்த்தனா: சாமை அரிசிப் பொங்கல்

கிச்சன் கீர்த்தனா: சாமை அரிசிப் பொங்கல்

ஒவ்வொரு நாளும் ‘இன்று என்ன சமைப்பது...' என்பதுதான் இல்லத்தரசிகள் மனத்தில் எழும் கேள்வி. எதையுமே திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். இதோ உங்களது கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் ஒரு உணவு என்கிற வரிசையில் வெள்ளிக்கிழமை - பொங்கலுக்கான சிறப்பு உணவு.

என்ன தேவை?

சாமை அரிசி - 200 கிராம்

மிளகு, சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - 100 மில்லி

பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பொடியாக நறுக்கியது - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு

முந்திரிப்பருப்பு - 10

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் சாமை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் லேசாக வறுக்கவும். குக்கரில் அரிசி, பருப்புக்கு ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்கிற அளவில் தண்ணீர் அளந்து ஊற்றி கலவையை ஐந்து விசில்விட்டு இறக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும். மிளகு, சீரகத்தை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, உடைத்த மிளகு, சீரகத்தை அதில் சேர்க்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். பின்னர் இதை வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் பொங்கலில் சேர்க்கவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பையும் தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: சிறுதானிய அரிசி குருணைகளிலும் இதே முறையில் பொங்கல் தயாரிக்கலாம்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வெள்ளி 14 ஜன 2022