மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

காஞ்சிபுரம்: உரிமை கோரப்படாத வாகனங்கள் மூலம் ரூ.1 கோடி வருமானம்!

காஞ்சிபுரம்: உரிமை கோரப்படாத வாகனங்கள் மூலம் ரூ.1 கோடி வருமானம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 1,896 வாகனங்களை ஏலம் விட்டு ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்களை இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பொது ஏலம் நடத்தி அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என தமிழகக் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்துக்குட்பட்ட 14 காவல் நிலையங்களில் உள்ள எவரும் உரிமை கோரப்படாத மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கணக்கிடப்பட்டன.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின்பேரில், ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மேற்படி வாகனங்களை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டது.

இதில் உரிமை கோரப்படாத மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 1,896 வாகனங்களை ஏலமிட்டதில், ரூ.1 கோடியே 11 லட்சத்து 29,000 தொகை வசூலிக்கப்பட்டது. அதை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் வழங்கினார்.

-ராஜ்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வியாழன் 13 ஜன 2022