மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களுக்கு அரசு மானியம்!

மாற்றுத்திறனாளிகளின்  உபகரணங்களுக்கு அரசு மானியம்!

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த விரும்பும் ஐந்து உதவி உபகரணங்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், ‘மாற்றுத்திறனாளிகளில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அவர்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களின் வகை மற்றும் மாதிரியை வழங்கும் வகையில், நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், அரசுக்குக் கடிதம் எழுதினார். அதில், ‘மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் தொழில்நுட்பக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையிலான பல்வேறு உதவி உபகரணங்கள் அரசால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் ஐந்து உதவி உபகரணங்களுக்கு மட்டும், பயனாளிகள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களை வழங்கும் வகையில் நேரடி மானியம் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்’ என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, மூன்று சக்கர மிதிவண்டிகள், சக்கர நாற்காலிகள், காதுகளுக்குப் பின்புறம் அணியும் காதொலிக் கருவிகள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள், பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் ஆகிய ஐந்து உபகரணங்களைத் தேர்வு செய்யலாம் என்று கூறினார். மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கையை ஆய்வு செய்த அரசு அதை ஏற்று ஆணையிட்டுள்ளது.

அதன்படி, `இந்த ஐந்து வகை உதவி உபகரணங்களை அவர்கள் தேர்வு செய்யலாம். இந்தத் திட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் தொழில்நுட்பக் குழுவால் பரிந்துரைக்கப்படும் அறுதியிட்ட வகையிலான உதவி உபகரணத்துக்கு பதிலாக பயனாளிகள் மேற்படி குழுவால் பரிந்துரைக்கப்படும் இதர வகையிலான தங்களுக்குத் தேவையான மாதிரியான உதவி உபகரணத்தைத் தேர்வு செய்ய அனுமதி வழங்கலாம்.

தேர்வு செய்யப்படும் உதவி உபகரணத்தின் விலை, அரசால் வழங்கப்படும் உதவி உபகரணத்தின் விலையை விட அதிகமாக இருந்தால் கூடுதல் விலையை மட்டும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும். அதன் பின்னரே உதவி உபகரணம் வழங்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வியாழன் 13 ஜன 2022