மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

மூன்றாம் அலை: மூன்று மடங்கு அதிகரிக்கும்!

மூன்றாம் அலை: மூன்று மடங்கு அதிகரிக்கும்!

இரண்டாம் அலையை விட மூன்றாவது அலையில் பாதிப்பு மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டிலும் 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு உள்பட எட்டு மாநிலங்கள் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக நேற்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று(ஜனவரி 13) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,”உலகம் முழுவதும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் முதலாவது அதிகமாக பாதிக்கப்படுவது சென்னைதான். அதன்பிறகு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும். அதற்கடுத்து தென்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் தொற்று அதிகரிக்கும். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. மருத்துவ வல்லுநர்களே தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலையை விட மூன்றாம் அலையில் பாதிப்பு மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும், 5-10 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது இரண்டாவது அலையில் 25-30 சதவிகிதமாக இருந்தது. அதுபோன்று ஆக்சிஜன் தேவை அதிகமாக இருந்தது. தற்போது அது அதிகளவில் தேவைப்படவில்லை. தற்போதும் டெல்டா பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

மக்களின் கவனக்குறைவால்தான் தொற்று பரவல் வேகமடைகிறது. பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட்டம் கூடக் கூடாது. அப்படியே கூட வேண்டிய நிலைமை ஏற்பட்டால், இரண்டு முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதுதான் வழி. இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,” பூஸ்டர் தடுப்பூசி செலுத்த60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள். அப்படி தகுதியானவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுபோன்று மக்கள் தாமாக முன்வந்து இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 93 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள்.

10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இவர்களுக்கு பொதுத் தேர்வு உள்ளது. அதுபோன்று தடுப்பூசியும் செலுத்த வேண்டியுள்ளது. மாணவர்களுக்குத் தடுப்பூசி மிக முக்கியமான ஆயுதம். இவையெல்லாம் குறித்து கலந்தாலோசித்து வருகிறோம், வரக்கூடிய கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்படும்” என்று கூறினார்.

-வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வியாழன் 13 ஜன 2022