மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

கிச்சன் கீர்த்தனா: பூண்டு கத்திரிக்காய் ரைஸ்

கிச்சன் கீர்த்தனா:  பூண்டு கத்திரிக்காய் ரைஸ்

ஒவ்வொரு நாளும் ‘இன்று என்ன சமைப்பது...’ என்பதுதான் இல்லத்தரசிகள் மனத்தில் எழும் கேள்வி. எதையுமே திட்டமிட்டு செய்தால் இந்தப் பிரச்சினைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். இதோ உங்களது கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் ஒரு உணவு என்கிற வரிசையில் வியாழக்கிழமைக்கான சிறப்பு உணவு.

என்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 200 கிராம்

பூண்டு - 100 கிராம்

பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் - 4

நெய் - 100 மில்லி

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பூண்டை வாணலியில் நெய்விட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு கத்திரிக்காயையும் தனியாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பின்னர் அதில் பச்சை மிளகாய், பொட்டுக்கடலையையும் சேர்த்து வறுத்து எடுக்கவும். பாஸ்மதி அரிசிக்கு ஒரு பங்குக்கு இரு மடங்கு தண்ணீர் அளந்துவிட்டு குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கவும். சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் வதக்கிய பூண்டு, வதக்கிய கத்திரிக்காய், தாளித்தது ஆகிய எல்லாவற்றையும் சேர்க்கவும். கூடவே தேவையான உப்பையும் சேர்த்து கலவையை நன்றாகக் கிளறவும்.

குறிப்பு: ஆனியன் ரைத்தா இதற்கு நல்ல காம்பினேஷன்.

நேற்றைய ரெசிப்பி: கோதுமை ரவை கிச்சடி

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வியாழன் 13 ஜன 2022