மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

டாஸ்மாக்கில் மது வாங்க கட்டுப்பாடு!

டாஸ்மாக்கில் மது வாங்க கட்டுப்பாடு!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் புதிய எண்ணிக்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி அனைத்து சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் டாஸ்மாக் கடைகளிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது.

இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே ஆறு அடி தூர சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.

மேற்கூறிய வழிமுறைகளை தவறாது கடைப்பிடித்து சமூக இடைவெளியைப் பின்பற்றியும் மற்றும் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும் கொரோனா நோய்த் தொற்று ஏற்படாத வகையில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட அறிவுறுத்தப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 12 ஜன 2022