மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

விசைத்தறி வேலைநிறுத்தப் போராட்டம்: தினசரி ரூ.60 கோடி உற்பத்தி பாதிப்பு

விசைத்தறி  வேலைநிறுத்தப் போராட்டம்: தினசரி ரூ.60 கோடி உற்பத்தி பாதிப்பு

புதிய கூலி உயர்வை அமல்படுத்த கோரி நேற்று (ஜனவரி 11) மூன்றாவது நாளாக விசைத்தறி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்வதால் தினசரி ரூ.60 கோடிக்கு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி நகரமான சோமனூர் வெறிச்சோடியது.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள புதிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுத்து வருவதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) முதல் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது எனக் கூட்டமைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி காலை 6 மணி முதல் விசைத்தறி உரிமையாளர்கள் அரசு அறிவித்த புதிய ஒப்பந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். தொடர்ந்து நேற்று (ஜனவரி 11) மூன்றாவது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையால் விசைத்தறி ஓட்டுபவர்கள், தார் ஓட்டுபவர்கள், அச்சு பிணைத்தல், பீஸ் மடிப்பவர்கள், ஜாப்பர்கள் என 13 விசைத்தறித் தொழிலோடு தொடர்புடைய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

பொங்கல் திருநாள் வரும் நிலையில் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் தொழில் சார்ந்தவர்களை மட்டுமின்றி சார்பு தொழிலாளர்களையும் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளது.

விசைத்தறி தொழில் நகரமாக சோமனூர் சற்று வட்டார பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலையில் தை பொங்கல் திருநாள் நெருங்கும் சூழ்நிலையில் விசைத்தறி நகரம் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து நிற்பது தொழில் சார்ந்த அனைவரையும் சிரமத்துக்குள்ளாக்கி உள்ளது.

தமிழக முதலமைச்சர், அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகள் விரைந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பத்தி தர வேண்டும் என்பதே விசைத்தறியாளர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. அதுவரை போராட்டம் தொடரும் என்கிறார்கள்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 12 ஜன 2022