மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

போகி: பிளாஸ்டிக்கை எரித்தால் ரூ.1000 அபராதம்!

போகி: பிளாஸ்டிக்கை எரித்தால் ரூ.1000 அபராதம்!

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வழக்கிற்கேற்ப, பொங்கலுக்கு முந்தைய நாளில் போகி பண்டிகை கொண்டாடப்படும். போகி அன்று மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து புது வண்ணம் பூசி அழகுப்படுத்துவார்கள். இவற்றுடன் வீட்டிலுள்ள பழைய ஆடைகள் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிப்பது வழக்கம்.

ஆனால் சில இடங்களில் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டும் என்பதற்காகவே பிளாஸ்டிக் மற்றும் டயர் பொருட்களை எரித்து காற்று மாசுபாட்டை உருவாக்குவார்கள்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் போகி பண்டிகையன்று டயர், பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் எரிக்கக் கூடாது. விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் அல்லது டயர் போன்ற பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

இதுதொடர்பாக, அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கான எச்சரிக்கையை வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்தமுறை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று போகிப் பண்டிகையின்போது சென்னை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள், பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டம் விமான நிலைய ஓடுதள புலப்பாட்டை பாதிப்பதோடு பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று ஏற்கனவே சென்னை விமான நிலையம் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

பழைய பொருட்களை எரிப்பதுதான் போகி பண்டிகை என்பது சரியானது அல்ல. நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், அழுக்கு, தீய குணங்கள் போன்றவற்றை நீங்கி விட்டு, புதிய நல்ல எண்ணங்களை பழக்கப்படுத்திக் கொள்வதுதான் சிறந்த போகி பண்டிகையாகும்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 12 ஜன 2022