மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

காவிரி டெல்டா பாசனத்துக்கு  தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு விநாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை படிப்படியாக குறைந்தது.

ஒருகட்டத்தில் தண்ணீர் தேவை முற்றிலும் இல்லாமல் போனது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் தேவை ஏற்பட்டது.

இதையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. டெல்டா பாசன பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

தற்போது டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில்கொண்டு நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 1,000 கன அடியில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.59 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 12 ஜன 2022