மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

வன்கொடுமை செய்து சிறுமி கொலை: தூக்கு தண்டனை உறுதி!

வன்கொடுமை செய்து சிறுமி கொலை: தூக்கு தண்டனை உறுதி!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம், புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல் என்கிற ராஜா. இவர், அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசினார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி ராஜாவுக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். அத்துடன் 6 மாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த, புதுக்கோட்டை காவல்துறை தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று(ஜனவரி 12) நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை சரி என்று வாதிட்டு, அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்தன.

இதையடுத்து, கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை செய்தே தூக்கு தண்டனை வழங்கி உள்ளது. எனவே குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 12 ஜன 2022